Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: July 1, 2025 at 3:37 pm
மதுரை, ஜூலை 1 2025: சிவகங்கை திருப்புவனம் பகுதியை சேர்ந்த பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 29) என்ற இளைஞர் காவல் நிலைய விசாரணையின் போது மரணம் அடைந்தார்.
இவரின் உடற்கூராய்வில் பெரும் சித்ரவதை செய்யப்பட்டு அஜித் குமார் மரணத்தை தழுவியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது வழக்கறிஞர் இளைஞர் துன்புறுத்தல் தொடர்பான வீடியோ ஒன்றை சமர்பித்துள்ளார்.
சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை
மேலும் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ அல்லது சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டும் எனவும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காத்திருப்பு பட்டியலில் எஸ்.பி
இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ ராவத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ராமநாதபுரம் எஸ்.பி. சதீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பை கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com