Kanimozhi MP: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழியில் ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதியடைவது வேதனை தருகிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
Kanimozhi MP: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழியில் ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதியடைவது வேதனை தருகிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

Published on: February 24, 2026 at 4:04 pm
சென்னை, பிப்.24, 2026: சென்னையில் 49 புறநகர் ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்.பி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழியில் ரயில்கள் ரத்தால் பயணிகள் அவதியடைவது வேதனை தருகிறது” என்றார்.
மேலும், “ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது; தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பயணிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: என் உயரம் எனக்குத் தெரியும்.. கருணாநிதியை நினைவு படுத்திய மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com