MK Stalins rally in Chennai: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் பேரணி 1000 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
MK Stalins rally in Chennai: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் பேரணி 1000 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
Published on: May 9, 2025 at 5:43 pm
சென்னை, மே 9 2025: இந்திய ராணுவத்துக்கு ஆதரவான மு.க. ஸ்டாலின் பேரணி அறிவித்துள்ள நிலையில் அதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்துள்ளது.
இது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்திய ராணுவத்தின் இந்த சிறப்பான நடவடிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆதரவையும் ஒத்துழைப்பும் வழங்குகிறது. இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுவதுடன் அப்ரே ஷன் சிந்தூர் என்ற நடவடிக்கை மூலம், இந்திய பெண் ராணுவ அதிகாரிகள் செய்துவரும் வீரம்மிக்க செயல்களையும் பாராட்டி வாழ்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “பயங்கர வாததிற்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு துணை யாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மு.க. ஸ்டாலின் பேரணி
இத்தகைய சூழ்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை பேரணி நடத்தயுள்ளதாக திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அத்துமீறல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும், அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர், பொதுமக்கள் மற்றும் மாண வர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும் என்றும் இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது. இந்த பேரணி 100 சதவீதம் மட்டுமல்லாமல், ஆயிரம் சதவீதம் அளவுக்கு வெற்றி பெற வேண்டும்.
இந்த பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிர்வாகிகள், கட்சியின் பொறுப்பாளர்கள் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய ராணுவத்துக்கு ஆதரவு; மு.க. ஸ்டாலின் நாளை நடைபயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com