Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Published on: January 16, 2026 at 2:44 pm
Updated on: January 16, 2026 at 2:46 pm
சென்னை ஜனவரி 16, 2026; மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என தொண்டர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த தினத்தை எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, எதிரிகள் எத்தனை வியூகம் அமைத்தாலும் அதனை முறியடித்து நாம் வெற்றி பெற வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் பொறுப்பு அதிமுகவுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காத்திருக்கிறார்கள் எனவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? தி.மு.க அரசுக்கு அன்புமணி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com