D K Ki Veeramani: திராவிட மாடல் அரசு தேவை; அதற்காக உழைப்பீர்.. உழைப்பீர் என திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
D K Ki Veeramani: திராவிட மாடல் அரசு தேவை; அதற்காக உழைப்பீர்.. உழைப்பீர் என திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
Published on: July 9, 2025 at 7:17 pm
சென்னை, ஜூலை 9 2025: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் மகத்தானவை.
வரும் தேர்தலில், அதனை வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகள், பண பலம், பத்திரிகைப் பலம் கொண்டு, பாசிச சக்திகள் முனையும் – அதற்கு இடந்தராமல், இனி ஓராண்டுக்கு தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர அயராது உழைக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “தன்னுடைய அரும்பெரும் சாதனைகள் என்ற பலத்தை நம்பியே, மகத்தான பேராதரவுடன் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் தி.மு.க.!
மதவெறி, ஜாதி வெறி மூலதனத்தோடு மட்டுமல்லாமல், பதவி வெறி, பலவீனம் உடையவர்களை எல்லாம் பிளந்தும், பிரித்தும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன் சூழ்ச்சி வேலைகளை செய்து வருகிறது பி.ஜே.பி. இதனை முறியடித்து, நாசகார பாசிச சக்திகளுக்கான பீடல்ல தமிழ்நாடு என்பதை விளக்கிட, ஆயத்தமாவீர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இவ்வாட்சி இன்றேல், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள் நிலை என்னவாகும்? என்ற நிலைப்பாட்டை மக்களுக்கு நன்கு விளக்குங்கள்!
நம் ‘தபசு’ இன்றைய ஆட்சியே நாளைய ஆட்சி என்ற உறுதியுடன் உழைப்பதும், மக்களை உணர வைப்பதும்தான்!
திண்ணைப் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு, தெருப் பிரச்சாரங்கள் பட்டி தொட்டிகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாய் பாயட்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com