டி20 உலக கோப்பை 2026.. மூன்று சாதனை படைத்த இந்தியா.. பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்

Anbumani Congratulate Indian Cricket Team: டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: March 9, 2026 at 9:59 am

சென்னை, மார்ச் 09 2026: டி20 உலகக்கோப்பை 2026 வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று சாதனைகளை படைத்திருக்கிறது. போட்டியை நடந்திய எந்த நாடும் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை; எந்த அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டதில்லை; இதுவரை நடைபெற்ற 10 உலகக் கோப்பை டி20 போட்டிகளில் மூன்றாம் முறையாக கோப்பை வென்ற அணி ஆகியவை தான் அந்த மூன்று சாதனைகள் ஆகும்.

டி 20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருப்பது இந்தியர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்பதற்கு நாடு முழுவதும் நடைபெறும் உற்சாகக் கொண்டாட்டங்கள் தான் சான்று ஆகும். இந்த உற்சாகமும், கொண்டாட்டமும் தொடர வேண்டும்; மட்டைப் பந்து போட்டிகளில் இந்தியா மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை.. எடப்பாடி பழனிச்சாமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com