Dr Ramadoss: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
Dr Ramadoss: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
Published on: August 13, 2025 at 10:21 am
சென்னை, ஆக.13 2025: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், புவனகிரி தொகுதி, சாத்தப்பாடி கிராமத்தின் வயல்வெளியில் அறுந்து விழுந்த மின்சார வயரை மிதித்த விவசாயி செல்வம் (59) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இறந்து போன செல்வம் மனைவியை இழந்தவர். இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்க போராடிக் கொண்டிருந்தவர். சாத்தப்பாடி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டவர் செல்வம் ஆவார்.
வயல்வெளியில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து கிடப்பதை பலமுறை இறந்துபோன செல்வமும், சாத்தப்பாடி கிராம மக்களும் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளுக்கும்; லைன் மேன் என சொல்லப்படும் மின்வாரிய களப் பணியாளருக்கும் தகவல் தெரிவித்தும் கூட; அதை பொருட்படுத்தாமல் போனதன் விளைவாக நேற்று செல்வத்தை இழந்துள்ளோம். மின்வாரிய களப்பணியை முறைப்படி மேற்கொள்ளாமல் உயிரிழப்புக்கு காரணமான ஊழியர் மீதும்; அவரை வழி நடத்தாத அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
செல்வம் குடும்பத்துக்கு 50 லட்சரூபாய் இழப்பீடும் செல்வம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் உடனடியாக வழங்கி, செல்வம் குடும்பத்தை காப்பாற்றி கரைசேர்க்க உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கையை முன் வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. டி.டி.வி தினகரன் முழு ஆதரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com