Doctor Anbumani Ramadoss: “நாடார் சங்கத் தலைவரை மிரட்டுவதா? சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Doctor Anbumani Ramadoss: “நாடார் சங்கத் தலைவரை மிரட்டுவதா? சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: June 23, 2025 at 10:25 am
சென்னை, ஜூன் 23 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் நாடார் மேற்கொண்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத சமூக விரோத சக்திகள், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பதும் கண்டிக்கத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கொள்கை நிலைப்பாடுகளை கொலை மிரட்டல்களால் பணிய வைக்க முடியாது. முத்து ரமேஷ் நாடாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கள் இறக்கும் போராட்டம் காரணமா?
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கு நாடார் சங்கத் தலைவர் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு சமூக விரோதிகள் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 35 புதிய கல்லூரிகள் திறப்பு, ஒரு ஆசிரியர் கூட நியமனம் இல்லை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com