திமுக 200+ தொகுதிகளில் வெல்லும்.. மு.க ஸ்டாலின்!

Assembly Election 2026: திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: April 10, 2026 at 5:17 pm

சென்னை, ஏப். 10 2026: சென்னை ஏப்ரல் 10, 2026; சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TNIE நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாநிலம் முழுவதும் “திராவிடன் மாடல் 2.0” அரசுக்கு மக்கள் உறுதியான ஆதரவு அளித்து வருவதாக அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்ததால் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். தனது தேர்தல் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்த அவர், தனது அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்த அளவே மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக காலை உணவு திட்டம் அறிமுகமான பிறகு பள்ளி சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் அரசியல் மரபைத் தாண்டி தனிப்பட்ட “Stalin flavour” உருவாக்கியதாக கூறப்படுவது குறித்து, “இந்த ஸ்டாலின் தனி மனிதர் அல்ல” என்று அவர் விளக்கம் அளித்தார். பெரியார், அண்ணாதுறை, கலைஞர் ஆகியோரின் திராவிட பாரம்பரியத்தின் தொடர்ச்சியே தாம் எனவும், அதனை “Dravidian flavour” என அழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், திமுக கூட்டணி மீது எந்த வித விரிசலும் இல்லை என கூறினார். வெற்றி பெறக்கூடிய கூட்டணி என்பதால் பல கட்சிகள் திமுகவுடன் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலை “தமிழ்நாடு டீம் Vs டெல்லி டீம்” என விவரித்த அவர், பா.ஜ.க. அ.தி.மு.க.வை பயன்படுத்தி பின்வாசல் வழியாக தமிழக அரசியலில் நுழைய முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் ‘இல்லத்தரசி’ திட்டத்தை இந்த தேர்தலின் “சூப்பர் ஸ்டார்” என்று குறிப்பிட்ட அவர், இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க : அரசியல் செய்கிறாரா, அடிமையாக வாழ்கிறாரா.. தொல். திருமாவளவன் குறித்து விந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com