TTV Dinakaran: “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran: “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Published on: June 27, 2025 at 8:26 pm
சென்னை, ஜூன் 27 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சை வடக்கு வீதியில் இயங்கிவரும் குடோனில் இருந்து 15 டன் போலி உரம் பறிமுதல் – விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போலி உர விற்பனை விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “ மழை,புயல், வெள்ளம்,வறட்சி, விளைச்சல் பாதிப்பு என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலும், தூர்வாரப்படாத வாய்க்கால்கள், கடைமடை வரை வந்து சேராத தண்ணீர் போன்ற அரசு நிர்வாகத்தின் அலட்சியங்களுக்கு மத்தியிலும் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது அவ்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது விளைச்சலை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக.. தி.மு.க அரசு மீது டி.டி.வி கடும் தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com