Assembly Election 2026: தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்புக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Assembly Election 2026: தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்புக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Published on: March 24, 2026 at 2:49 pm
கடையநல்லூர், மார்ச் 24 2026: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு குடியிருப்பில் இயங்கி வந்ததாக கூறப்படும் திமுகவின் தேர்தல் அலுவலகம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடையநல்லூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே அமைந்துள்ள நகராட்சி பொறியாளர் குடியிருப்பை, நகரமன்றத் தலைவர் தலைமையிலான தி.மு.க.வினர் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, அரசு குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கருதி அதிகாரிகள் அந்த அலுவலகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் அரசு வசதிகளை பயன்படுத்துவது தேர்தல் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானதாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பணம், பொருட்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து புகார்கள் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தேர்தல் செயல்முறை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அரசு வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2001-இல் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. சட்டமன்றத் தேர்தல் பிளாஷ்பேக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com