Sewage treatment plant at Thiruverkaud: சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sewage treatment plant at Thiruverkaud: சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Published on: May 9, 2025 at 4:20 pm
சென்னை, மே 9 2025: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானமாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாப் பயிற்சி செய்யக்கூடிய இடமாகவும் இருக்கும் இந்த மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் பேரணி; MH ஜவாஹிருல்லா வரவேற்பு
மேலும், “ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், ஏராளமான மாணவ- மாணவியர்கள் பயிலும் அரசுப்பள்ளி மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரி என சுற்றுவட்டாரத்தில் மக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஸ்ரீநகர் விடுதியில் மாணவர்கள்.. அமித் ஷாவுக்கு வைகோ கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com