2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

Published on: March 18, 2026 at 11:44 am
சென்னை, மார்ச் 18, 2026: 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்கி இருந்தது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் குறைப்பு ஏன்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள காரணத்தினால், தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தற்போது 5 இடங்களில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது” என்றார்.
தொடர்ந், “பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கான அரசியல் நிலையில் இருந்து ஒருபோதும் கடந்து செல்ல மாட்டோம்” என்றார்.
தி.மு.க. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை?
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூக்கு அதிகப்பட்சமாக 28 இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
| வ.எண் | கட்சி | இடங்கள் |
| 01 | காங்கிரஸ் | 28 |
| 02 | மதிமுக | 4 (3ல் திமுக சின்னத்தில் போட்டி) |
| 03 | இந்திய யூனியன் முஸ்லீம் லீக் | 02 |
| 04 | கொங்கு மக்கள் தேசிய ஜனநாயக கட்சி | 02 |
| 05 | மனிதநேய மக்கள் கட்சி | 02 |
| 06 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 05 |
இதையும் படிங்க: காரில் தீ வைத்து தற்கொலை: தாயை கட்டிஅணைத்தபடி இருந்த குழந்தைகள்: நெல்லையில் இதயத்தை உருக்கும் சம்பவம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com