Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.
Published on: June 28, 2025 at 10:57 pm
சென்னை, ஜூன் 28 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது. மக்களை வாழவைக்கப் போவதாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டி ஊழல் செய்வது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “மராட்டியத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும்; முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார். மராட்டிய அரசின் இம்முடிவுக்கு அம்மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மராட்டிய அரசின் இந்த முடிவு அம்மாநில மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதில் வியப்பில்லை” எனக் கூறியுள்ளார்.
ஏமாற்றிய தி.மு.க.- பா.ம.க சாதிக்கும்
தொடர்ந்து, “திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது.
திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும்; நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க போலி உர விற்பனையை தடுப்பது தி.மு.க.வின் கடமை; டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com