Anbumani Ramadoss: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி எனச் சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 30,000 பேருக்கு
ரூ.3000 வரை ஊதியத்தை சுரண்டுவதா? எனவும் வினாயெழுப்பி உள்ளார்.
Anbumani Ramadoss: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி எனச் சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 30,000 பேருக்கு
ரூ.3000 வரை ஊதியத்தை சுரண்டுவதா? எனவும் வினாயெழுப்பி உள்ளார்.
Published on: June 20, 2025 at 11:09 am
Updated on: June 20, 2025 at 11:12 am
சென்னை, ஜூன் 20 2025: பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 15-ஆம் ஊதிய விகிதத்தின்படி நடப்பு மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவிருக்கும் நிலையில், ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் திட்டமிட்டு பல மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அதனால், போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊதிய இழப்பு ஏற்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் கூட சுரண்டும் போக்கு கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
அம்பலமான ஊழல்
மேலும், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 15&ஆம் ஊதிய ஒப்பந்தம் கடந்த மே 29&ஆம் நாள் கையெழுத்திடப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய ஒப்பந்தம் 2023&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பின்தேதியிட்டு செயல்படுத்தப்படவுள்ளது என்ற போதிலும், புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படியான முதல் ஊதியம் நடப்பு மாத இறுதியில் தான் வழங்கப்படவுள்ளது.
அதற்கான ஊதியப் பட்டியல் தயாரிக்கப்படும் நிலையில் தான், புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் முறையாக நிர்ணயிக்கப் படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. போக்குவரத்துக்கழக நிர்வாகங்களும், உயரதிகாரிகளும் இணைந்து தான் ஊழியர்களிடம் ஊதிய சுரண்டலை செய்திருக்கின்றனர் என்பது அம்பலமாகியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி ஆட்சிக் கால ஒப்பந்தம்
தொடர்ந்து, “கருணாநிதி ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இது 4 ஆண்டுகள் என அதிகரிக்கப்பட்டதால், ஓராண்டுக்கான ஊதிய உயர்வை அவர்கள் இழந்தனர்.
இந்த வகையில் 30 ஆண்டுகள் பணி செய்யக்கூடிய ஒரு தொழிலாளி 10 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை இழப்பார். அதுமட்டுமின்றி, இப்போது கையெழுத்திடப்பட்டுள்ள 15&ஆம் ஊதிய ஒப்பந்தத்தின்படி உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான நிலுவைத் தொகை 2023&ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வழங்கப்படுவதற்கு பதிலாக 2024&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், ஓராண்டுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இழப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அரசு மீது புகார்
மேலும், “இவ்வளவுத் தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் மீது ஊதியச் சுரண்டல் என்ற புதியத் தாக்குதலையும் திமுக அரசு நடத்தியிருக்கிறது. மனசாட்சியும், மனித நேயமும் உள்ள எந்த அரசும் இப்படி ஒரு சுரண்டலில் ஈடுபடாது. ஆனால், திமுக அரசுக்கு அவை இரன்டும் இல்லை. அதனால், தொழிலாளர்கள் மீது எத்தகையத் தாக்குதலையும் நடத்தத் தயங்காது.
இந்த சுரண்டலால் திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சாகித்திய விருதுகளை குவித்த தமிழர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com