Anbumani Ramadoss: “ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன; தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Anbumani Ramadoss: “ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன; தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: June 23, 2025 at 11:34 am
சென்னை, ஜூன் 23 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக உழவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர். அவர்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது. இதை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடக பேச்சுவார்த்தை- இழப்பீடு வழங்குக
மேலும், “உழவர்களை தவிர்த்து விட்டு மாம்பழக் கூழ் ஆலை அதிபர்களை மட்டும் அழைத்துப் பேசுவது போல நாடகமாடிய தமிழக அரசு, ஜூன் 20-ஆம் தேதி முதல் மாம்பழக் கூழ் ஆலைகள் மாம்பழங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று அறிவித்ததுடன் ஒதுங்கி விட்டது. ஆனால், ஜூன் 20-ஆம் தேதிக்கு பிறகு நான்கு நாள்களாகியும் எந்த ஆலையும் மாம்பழங்களை சொல்லிக்கொள்ளும் வகையில் கொள்முதல் செய்யவில்லை.
தமிழகத்தில் இதுவரை 40% அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனது தமிழக அரசு இனியும் துரோகத்தைத் தொடராமல் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : நாடார் சங்கத் தலைவரை மிரட்டுவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com