திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு.. அன்புமணி ராமதாஸ்

Anbumani ramadoss: திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் ஜனநாயக படுகொலை செய்வதா என வினவியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Published on: October 16, 2025 at 6:03 pm

சென்னை, அக்.16, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை (அக்.16, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து, “ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல், விளம்பரங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாகவே காலம் தள்ளிவரும் திமுக அரசு, அதற்காகவே பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் தாளம் போட சிலரை வைத்திருக்கிறது. அவ்வாறு தாளம் போடுவர்கள் இருந்தால் தான் தங்களுக்கு பிழைப்பு நடக்கும் என்பதற்காகவே ஜனநாயக முறையில் பாட்டாளி மக்கள் கட்சின் சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை அங்கீகரிக்காமல் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களை பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல.

வலிமையாக செயல்படும் கட்சிகளையெல்லாம் உடைத்து, அதில் ஒரு பிரிவை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது திமுகவின் கலை ஆகும். அதே ஆயுதத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் திமுக பயன்படுத்தி வருகிறது என்று ஏற்கனவே நான் குற்றஞ்சாட்டியிருந்தேன். அதற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கத் துடிப்பதன் மூலம் எனது குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. திமுக ஏவிய ஆயுதம் முனை மழுங்கி மொக்கையான பிறகும் அக்கட்சித் தலைமை திருந்த மறுக்கிறது.

பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று முழங்கிய திமுகவும், அதற்கு தோள் கொடுத்து வரும் பேரவைத் தலைவரும் பேரவைக் குழு நிர்வாகிகள் நியமனத்தில் மட்டும் காலவரையே இல்லாமல் ஆய்வு செய்வோம் என்பது என்ன நீதி? தங்களுக்கு ஒரு நீதி…. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?

பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த நொடியே அரசியல் அடையாளங்களை இழந்து விடுகிறார். நீதி பிறழாது நடுநிலையுடன் செயல்படுவது தான் அவரது பணி ஆகும். திமுகவைச் செர்ந்த பி.டி. ஆர் பழனிவேல் இராஜன் போன்ற பெருந்தகையாளர்கள் அப்படித் தான் செயல்பட்டிருக்கிறார்கள்.

அந்த இருக்கையில் அமர்பவர்கள் அதேபோல் செயல்படுவதன் மூலம் தான் அந்த இருக்கைக்கு பெருமை சேர்க்க முடியும். எனவே, ஆளுங்கட்சியின் விருப்பப்படி, ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதை விடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்தி வைப்பதா? அன்புமணி கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com