Anbumani Ramadoss: “வாங்கிய கடன் ரூ.1.31 லட்சம் கோடி, மூலதனச் செலவு ரூ. 40,500 கோடி மட்டுமே: திமுக அரசின் செயலின்மையை
கண்டித்த சி.ஏ.ஜி., மக்களும் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “வாங்கிய கடன் ரூ.1.31 லட்சம் கோடி, மூலதனச் செலவு ரூ. 40,500 கோடி மட்டுமே: திமுக அரசின் செயலின்மையை
கண்டித்த சி.ஏ.ஜி., மக்களும் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: October 18, 2025 at 10:58 pm
சென்னை, அக்.18, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை (அக்.18, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-24ஆம் ஆண்டில் திமுக அரசு கடனாக வாங்கிய ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 597 கோடியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.40,500 கோடியை மட்டுமே மூலதன உருவாக்கத்திற்காக செலவிட்டிருப்பதாகவும், இது திமுக அரசின் மோசமான நிதி நிர்வாகத்தைக் காட்டுவதாகவும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை என்று பா.ம.க. தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “வருவாய்ப் பற்றாக்குறையை 2023&24ஆம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்க திமுக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது; ஆனால், ரூ.37,540 கோடியாக அதிகரித்தது. 2024&25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.49,278 கோடியாக அதிகரித்து விட்டது. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஒழித்து, ரூ.1218 கோடி வருவாய் உபரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக அதிகரித்து விட்டது. இதை விட மோசமாக நிதிநிலையை எந்த அரசாலும் சீரழிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திமுக அரசு இன்னும் கூட நிதிநிலையை மேம்படுத்தவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கூட ரூ.14,307.74 கோடி மூலதன செலவு செய்ய வேண்டிய திமுக அரசு அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக ரூ.4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த அரையாண்டில் ரூ.28,215 கோடி செலவிட வேண்டிய நிலையில் ரூ.9899 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால், கடனாக மட்டும் செப்டம்பர் வரை ரூ.37,082 கோடியை வாங்கிக் குவித்துள்ளது.
இன்னொருபுறம் 2023-24ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட 1540 திட்டங்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில், 14,808 கோடி ரூபாய் செலவிடப்படாமல், முழுமையாக மீண்டும் அரசுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் தணிக்கை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. ஒருபுறம் கடனை வாங்கிக் குவிக்கும் திமுக அரசு, அதை சரியாக செலவழிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது. வீண் செலவுகளை சமாளிக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. திமுக அரசின் இந்த துரோகத்திற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டம்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com