Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: July 3, 2025 at 2:00 pm
சென்னை, ஜூலை 3 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை (ஜூலை 2 2025) விடுத்திருந்த அறிக்கையில், “இது தமிழ்நாடா… இல்லை காடா? என கேள்வியெழுப்பி இருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, “ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் மணல் கொள்ளையர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அவர்கள் துணிச்சல் பெற்று செய்தியாளரைத் தாக்குவதற்கு காரணமாகியுள்ளது.
ஒருபுறம் காவல் நிலைய மரணம், இன்னொரு புறம் செய்தியாளர்கள் மீது தாக்குதல், கட்டுப்படுத்தப்படாத பட்டாசு ஆலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது தமிழ்நாடா… இல்லை காடா? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “செய்தியாளர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஒரு மாநிலத்தில் நிலவும் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்று தான் பொருள். தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் செய்தியாளரைத் தாக்கிய செம்மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது; ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com