Actor Sarath Kumar: தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு நடிகர் சரத் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Actor Sarath Kumar: தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு நடிகர் சரத் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: June 14, 2025 at 11:37 am
சென்னை, ஜூன் 14 2025: நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பிரமுகருமான ரா. சரத் குமார் விடுத்துள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் கீழபாட்டாகுறிச்சி பகுதியில் இயங்கி வரும் அன்னை முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்த செய்தியால் தென்காசி மக்கள் போன்று நானும் பெரும் மனவேதனை அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “எத்தகைய குடும்ப சூழ்நிலை காரணமாக இருந்தாலும் முதியோர் இல்லங்களில் பெற்றோரை சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சுமார் 60 பேருடன் இயங்கிவரும் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45), மதுரை தனலட்சுமி (80) உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
உரிய விசாரணை மூலம் இந்த உயிரிழப்பிற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கையும், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திருமாவளவனின் மதசார்பின்மை காப்போம் பேரணி; ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி மறுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com