Assembly elections 2026: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
Assembly elections 2026: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
Published on: June 22, 2025 at 2:05 pm
சென்னை, ஜூன் 22 2025: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகின. இந்தக் கருத்துக் கணிப்பை லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்தியுள்ளனர்.
அதாவது சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். அவர்கள் நடத்தியுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
உதயநிதி vs அண்ணாமலை
இதில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் பந்தயத்தில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு ஆதரவாக 77.80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 73.80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வெறும் 4 சதவீதம் மட்டுமே வேறுபாடு உள்ளது.
இந்தப் போட்டியில் 67.99 சதவீத வாக்குகளுடன் உதயநிதி ஸ்டாலின் 3வது இடத்திலும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை 64.58 சதவீத வாக்குகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
விஜய் எத்தனையாவது இடம்?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் 60.58 சதவீத வாக்குகளுடன் 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? அன்புமணி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com