சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்.. கிழித்து எறியப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள்!

Congress posters torn down : சென்னையில் காங்கிரஸ் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: February 17, 2026 at 9:01 pm

சென்னை, பிப்.17, 2026: சென்னையில் காங்கிரஸ் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ், இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புகிறது. மேலும், ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

இது தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்தக் கோரிக்கை எழுந்த போது, திமுக மூத்த அமைச்சர்கள் காங்கிரஸூக்கு பதிலளிக்கும் வகையில் மறைமுகமாக பேசினார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தங்களது கருத்துக்களை முன்வைத்த நிலையில், தி.மு.க. நிர்வாகிகளும் பதில் வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் பலமானது. இந்த நிலையில், சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம் என சென்னையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் சுவரொட்டிகள் கிழிப்பு

அதாவது, ஆட்சியில் பங்கு கோரி சென்னை முகப்பேர் பகுதியில், காங். உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் “சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்” என ஒட்டப்பட்ட காங்கிரஸ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த சுவரொட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். மேலும், இந்த சுவரொட்டிகள் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உண்டு.. தொல். திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com