Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: May 6, 2025 at 3:56 pm
திருவள்ளூர் மே 6 2025: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள், சேலையூர் மடத்தில் பயின்று வந்த ஹரிஹரன், வெங்கட ரமணன் மற்றும் வீரராகவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இந்த மூன்று வேத பாடசாலை மாணவர்களும் சந்தியாவந்தனம் செய்யும்போது படிக்கட்டில் இருந்து தவறி கோவில் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேத பாட சாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைகோ தனியார் மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com