சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி!

Assembly election 2026: அ.தி.மு.க. சென்னை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மறைந்த பகுஜன் சமாஜ் தலைவரின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார்.

Published on: March 29, 2026 at 1:53 pm

சென்னை, மார்ச் 29, 2026: அ.தி.மு.க. சென்னை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், சென்னை நகரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் யார் யார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. முக்கியமான தொகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியால் சென்னை நகரத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் திரு.வி.க நகரில் களம் காண்கிறார். இதேபோல், முன்னாள் அமைச்சர்கள் பி. வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோரும் தேர்தலில் களம் காண்கிறார்கள். மேலும், அ.தி.மு.க கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரபல சினிமா இயக்குனர் சுந்தர் சி, புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுரையில் போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அ.தி.மு.க. 150 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்.. புதிய தொகுதி எது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com