IPL 2025 Delhi Capitals: ஐ.பி.எல் போட்டிகள் 2025ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக அக்ஸர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2025 Delhi Capitals: ஐ.பி.எல் போட்டிகள் 2025ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக அக்ஸர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on: March 15, 2025 at 11:47 am
Updated on: March 15, 2025 at 11:51 am
புதுடெல்லி, மார்ச் 15, 2025: ஐபிஎல் 2025 சீசனுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி அக்ஸர் படேலை கேப்டனாக நியமிப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அக்ஸர் பட்டேல் 2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல் அணியில் இணைந்தார். 31 வயதான இவ,ர் அதன்பின்னர் 6 சீசனங்களிலும் கேப்பிடல்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடி சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அக்ஸர் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய டெல்லி கேப்பிடல் அணியின் தலைவர் கிரண் குமார், 2019 ஆம் ஆண்டு முதல் கேப்பிடல்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக அக்ஸர் இருந்து வருகிறார். அணியில் சிறந்த வீரராக தொடர்ந்து, தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளது அவரது திறமையை காட்டுகிறது. இந்த புதிய பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் மற்றும் அவர் இதில் சிறந்து விளங்குவார் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அக்சர் படேல் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். 1653 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 123 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 2016 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த ஹாட்ரிக்கும் அடங்கும். 2019 ஆம் ஆண்டில் கேபிடல்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து தன்னை ஒரு சிறந்த ஆல்கிரவுண்டராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க Champions Trophy 2025: விராத் கோலி முதல் ரோகித் வரை.. இந்தியர்களின் ஆட்டம் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com