Rinku Singh : உத்தரப் பிரதேச அரசு ரிங்கு சிங்கிற்கு புதிய பொறுப்பு வழங்கி கவுரவிக்க உள்ளது.
Rinku Singh : உத்தரப் பிரதேச அரசு ரிங்கு சிங்கிற்கு புதிய பொறுப்பு வழங்கி கவுரவிக்க உள்ளது.

Published on: March 24, 2026 at 3:09 pm
அலகாபாத் மார்ச் 24, 2026; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக செய்த சிறப்பான சேவைக்காக, உத்தரப் பிரதேச அரசு அவரை பிராந்திய விளையாட்டு அலுவலராக (Regional Sports Officer) நியமிக்கத் தீர்மானித்துள்ளது.
இதில் குறிப்பிட்ட தக்க அம்சம் என்னவென்றால், IPL 2026 தொடங்குவதற்கு முன் இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ரிங்கு சிங், தனது தொடர்ச்சியான ஆட்ட திறமை மற்றும் இந்திய அணிக்கான பங்களிப்பு காரணமாக இந்த அங்கீகாரத்தைப் பெறுகிறார்.
இது, மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இளம் வீரர்களுக்கு மாதிரியாக அமையும் என்று உத்தரபிரதேச மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்..
உத்தரப்பிரதேச அரசு விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த விருது மற்றும் அரசு பணியை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறு சர்வதேச வீரர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி அறிவிக்கிறார்.
இந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு ராணி லட்சுமிபாய் விருதுகளையும் வழங்கி கௌரவ படுத்த உள்ளது. இதனை, மாநில விளையாட்டு இயக்குநர் ஆர்.பி. சிங் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிங்கு சிங் எதிர்கொண்ட சவால்கள்
T20 உலகக் கோப்பை 2026 போட்டியின் போது, ரிங்கு சிங் தனது தந்தையின் நோய் மற்றும் மறைவால் கடினமான காலத்தை எதிர்கொண்டார்.
அவர், இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியபோதும், கிரேட்டர் நோய்டா மற்றும் தேசிய அணிக்கிடையே தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த சவால்களை மீறியும், அவர் தனது வீரத் திறமையால் அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; மதம் மாறினால் பட்டியல் இன அந்தஸ்து இழப்பு.. உச்ச நீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com