டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்..வெல்லப்போவது யார்?

T20 worldcup 2026 finals: டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

Published on: March 8, 2026 at 10:10 am

ஆமதாபாத், மார்ச் 08 2026: டி20 உலக கோப்பை 2026 இறுதிப்போட்டி கிரிக்கெட் கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது, இரண்டாவது அறை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் டி20 உலக கோப்பைக்காண இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றுமா அல்லது நியூசிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை கையில் ஏந்துமா என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இந்த ஆட்டத்தை ஒளிபரப்பு செய்கின்றன.

இதையும் படிங்க : மும்பை சிவாஜி பார்க்கில் கிரிக்கெட் ஆடிய ரோகித் சர்மா.. திருவிழா போல் குவிந்த ரசிகர்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com