Rohit Sharma: மும்பை சிவாஜி பார்க்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் ஆடிய நிலையில் அவரை காண ரசிகர்கள் படை எடுத்தனர்.
Rohit Sharma: மும்பை சிவாஜி பார்க்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் ஆடிய நிலையில் அவரை காண ரசிகர்கள் படை எடுத்தனர்.

Published on: March 7, 2026 at 2:28 pm
Updated on: March 7, 2026 at 2:32 pm
மும்பை மார்ச் 7 2026; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இன்று மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் கிரிக்கெட் ஆடினார்; இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் திருவிழா போல் அப்பகுதியில் கூட ஆரம்பித்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
Mumbai, Maharashtra: Rohit Sharma visited Shivaji Park to play cricket, drawing a large crowd of fans eager to catch a glimpse of the former India national cricket team captain pic.twitter.com/PW7CvdDxPC
— IANS (@ians_india) March 7, 2026
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரோகித் சர்மா; இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் ரோகித் சர்மாவின் சாதனைகள் அளப்பரியவை; ஒரு நாள் போட்டியில் கூட இரட்டை சதம் என்ற நிகரில்லா சாதனையை படைத்துள்ள ரோஹித் சர்மா, மும்பை சிவாஜி பார்க்கில் கிரிக்கெட் ஆடியது அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ரசிகர்கள் கூடி நின்று ரோகித் சர்மாவை உற்சாகப்படுத்திய நிலையில் ரோகித் சர்மா தொடர்ந்து பயிற்சிகள் ஈடுபட்டார்.
இதையும் படிங்க; ‘Boom Boom Bumrah’.. டி.ஜே செயலை கடுமையாகச் சாடிய சுனில் கவாஸ்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com