உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா?

Pakistan in T20 World Cup 2026: பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இறுதி முடிவு பாகிஸ்தான் அரசாங்கத்தின் கையில் உள்ளது

Published on: January 26, 2026 at 4:04 pm

இஸ்லாமாபாத், ஜன.26, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இறுதி முடிவு பாகிஸ்தான் அரசாங்கத்தின் கையில் உள்ளது
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஷின் நக்வி, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபை சந்தித்து இறுதி முடிவை எடுக்க உள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் 16 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்தாலும், அது பங்கேற்பை உறுதி செய்யவில்லை. இதற்கிடையில், வங்கதேசம் இந்தியாவில் விளையாட மறுத்ததால், அவர்களை போட்டியிலிருந்து நீக்கியது.

இந்நிலையில், பாகிஸ்தானும் வங்கதேசத்திற்கு ஆதரவாக புறக்கணிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் புறக்கணித்தால், பி.எஸ்.எல்- போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட தடை, ஆசியக் கோப்பை நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது.

அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணித்தால், PSL-இல் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாது. தொடர்ந்து, ஆசியக் கோப்பை மற்றும் எதிர்கால ICC போட்டிகளில் பங்கேற்க தடைகள் விதிக்கப்படும். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சர்வதேச தனிமைப்படுத்தல் விரிவாகும். அதேநேரம் போட்டியில் கலந்துகொண்டால், பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தம் தணிந்து, சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல விளையாட்டு அனுபவமும் கிடைக்கும்.

இதையும் படிங்க: போட்டிகளை மாற்றும் திட்டம் இல்லை.. வங்கதேச கோரிக்கை நிராகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com