Net worth of Virender Sehwag: முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக்கின் சொகுசு வீடு சுமார் ரூ. 130 கோடி என்று கோடியாகும்.
Net worth of Virender Sehwag: முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக்கின் சொகுசு வீடு சுமார் ரூ. 130 கோடி என்று கோடியாகும்.
Published on: April 27, 2025 at 6:26 pm
புதுடெல்லி, ஏப். 27 2025: இந்தியாவின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான விரேந்தர் சேவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின் ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு, சொகுசு வீடு, வாகனங்கள் மற்றும் வருமானம் ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சொத்து மதிப்பு
விரேந்தர் சேவாக்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 340 முதல் 350 கோடி வரை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் அவருடைய ஆண்டு வருமானம் 30 கோடியாகும். இதில் ரூ. 24 கோடி சமூக ஊடகங்களில் இருந்து சம்பாதித்துள்ளார்.
சேவாக்கிற்கு டெல்லி ஹவுஸ் காஸ்ஸில் ரூ. 130 கோடி மதிப்பில் தனியார் ஜிம், நீச்சல் குளம், மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு உள்ளது.
சேவாக்கை சமூக வலைதளங்களில் 23 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ. 24 கோடி சம்பாதித்துள்ளார். சேவாக் தனது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து, ரசிகர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு வருகிறார்.
சேவாக் இன்டர்னேஷனல் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் ஹரியானாவில் அமைந்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான NFTக்கள், பிரபலமான பிராண்டுகளுடன் கூட்டு முயற்சிகளும் மேற்கொண்டுள்ளார்.
சேவாக்கும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத்தும் பிரிந்ததாக வதந்திகள் பரவியுள்ளன. இவர்கள் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளனர்.
விரேந்தர் சேவாக், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னர், ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு, சொகுசு வீடு, வாகனங்கள் மற்றும் வருமானம் ஆகியவை அவரது வெற்றியை பிரதிபலிக்கின்றன.
இதையும் படிங்க ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இளம் வீரர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com