Steve Waugh: கடந்த சில போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மோசமான ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் விமர்சித்துள்ளார்.
Steve Waugh: கடந்த சில போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மோசமான ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் விமர்சித்துள்ளார்.
Published on: April 22, 2025 at 4:25 pm
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த சில ஆட்டங்களில் அதீத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி பட்டங்களை வென்றபோதிலும், இரண்டு போட்டிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா சில அதிர்ச்சியூட்டும் தோல்விகளைச் சந்தித்தது.
ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஐ.க்கு அவர் அளித்த பேட்டியில், ரோஹித் சர்மாவை குறிப்பிட்டு “கண்ணாடியில் உங்களைப் பாருங்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்து, நான் இன்னும் கேப்டனாக இருக்க விரும்புகிறேனா அல்லது இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேனா? நான் உறுதியுடன் இருக்கிறேனா? நான் அதற்கு போதுமான நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறேனா? என தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார். “நாட்டுக்காக விளையாடுவது பெரும் மரியாதையும் பெருமையும் கொண்டது. அதில் அலட்சியம் காட்ட முடியாது. என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கே.எல். ராகுல் மகள் பெயர் தெரியுமா? அவரே வெளியிட்ட தகவல்!
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், கடைசி டெஸ்டில் அவர் அணியிலிருந்து நீக்கி சுப்மன் கில் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டனர். இந்த முடிவுகள், அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தின் முடிவை குறிக்கும் என தகவல்கள் பரவின.
இருப்பினும், அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அவர் பலமுறை கூறியுள்ளார். தொடர்ந்து, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் தொடர்களில் இந்தியாவை வழிநடத்த ஆவலுடன் இருப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கங்குலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com