IPL 2026 சாதனை: ரன் சேஸ்களில் 4000 ரன்கள் கடந்த விராட் கோலி!

IPL 2026: ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார் விராத் கோலி. அது குறித்துப் பார்க்கலாம்.

Published on: March 29, 2026 at 11:09 pm

பெங்களூரு, மார்ச் 29, 2026: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோலி, இந்திய பிரீமியர் லீக் வரலாற்றில் முதன்முறையாக ரன் சேஸ்களில் 4000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். வலதுகை பேட்ஸ்மேன் இவர், இந்த வரலாற்றுச் சாதனையை பெங்களூருவில் எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2026 தொடக்கப் போட்டியில், சாம்பியன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நிகழ்த்தினார்.

மேலும், விராத் கோலி முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஷோயப் மாலிக்கை முந்தி, T20 கிரிக்கெட்டில் ஆறாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக உயர்ந்துள்ளார். ஷோயப் மாலிக் 557 போட்டிகளில் 515 இன்னிங்ஸ்களில் 13,571 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி 35.99 ஆகும். குறைந்தபட்ச வடிவமான T20-இல் அவர் 83 அரைசதங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2026.. எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 டிக்கெட் இலவசம்.. டி.கே. சிவக்குமார்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com