Jasprit Bumrah: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது காயம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Jasprit Bumrah: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது காயம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Published on: June 24, 2025 at 4:22 pm
புதுடெல்லி, ஜூன் 24 2025: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது கடந்த கால காயங்கள் மற்றும் கிரிக்கெட் பயணம் குறித்து மனம் திறந்த பேசினார். அப்போது, தாம் காயமுற்ற போது இனி அவ்வளவுதான்; இவரால் ஆட முடியாது என பலர் கூறியதாக கூறினார்.
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, “கிரிக்கெட்டில் எதிர்பாராதவிதமாக காயமுற்றேன்; அப்போது என்னிடம் பலரும் இனி அவ்வளவுதான். கிரிக்கெட்டில் காயம் அடைந்தால் மீண்டும் விளையாட முடியாது என்றார். மேலும், இன்னும் 6 மாத காலத்தில் பும்ரா கிரிக்கெட்டில் காணாமல் போய்விடுவார்; அவரால் விளையாட முடியாது” என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் நிலைமை வேறு; முதலில் கிரிக்கெட்டில் 6 மாதம் தாக்குப்பிடிப்பாய் என்று சொன்னவர்கள் பின்னர் 8 மாதமாக உயர்த்தினார்கள். ஆம். நான் அடுத்து 8 மாதம் தாக்குப்பிடிப்பேன் என்றார்கள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே நான் கிரிக்கெட்டில் பயணித்தேன். 6,8 மாதம் என்றவர்கள் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். ஆனால் நான் தற்போது 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி விட்டேன்” என்றார்.
இதையும் படிங்க ஆடம்பர பங்களாவில் வசிக்கும் வீரேந்திர சேவாக்.. நிகர சொத்து மதிப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com