KKR vs Punjab Kings Clash: ஐபிஎல் 2026: மழை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), பஞ்சாப் கிங்ஸ் போட்டி கைவிடப்பட்டது.
KKR vs Punjab Kings Clash: ஐபிஎல் 2026: மழை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), பஞ்சாப் கிங்ஸ் போட்டி கைவிடப்பட்டது.

Published on: April 7, 2026 at 10:27 am
கொல்கத்தா, ஏப்.7, 2026: கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு ஆட்டமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த, ஐபிஎல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தலா ஒரு புள்ளி
இதற்கிடையில், பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் சேவியர் பார்ட்லெட், வெளிநாட்டு வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் கேமரன் கிரீனை இரண்டாவது ஓவரிலேயே அவுட் செய்தார். மழையால் விளையாட்டு தொடர முடியாததால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் புள்ளியை பெற்றது; ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் இரண்டு வெற்றிகளும், ஒரு ‘நோ-ரிசல்ட்’ உடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இன்றைய போட்டி
இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், கௌகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும். ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்; மும்பை இந்தியன்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்.. அமன் செராவத் தலைமை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com