U 19 World Cup: இளையோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.7.50 கோடி பரிசு அறிவித்துள்ளது.
U 19 World Cup: இளையோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.7.50 கோடி பரிசு அறிவித்துள்ளது.

Published on: February 7, 2026 at 7:48 pm
புதுடெல்லி, பிப்.7, 2026: வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அந்த அணிக்கு ₹7.5 கோடி வெகுமதித் தொகையை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றதற்காகவும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்ததற்காகவும், அந்த அணிக்கு பிசிசிஐ ₹7.5 கோடி ரொக்கப் பரிசை வழங்கும்” என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட்
இந்தியா, 411/9 என்ற அபாரமான ரன்களை குவித்தது, வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்களுடன் 175 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆயுஷ் மத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார், அபிக்யான் குண்டு 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் போராடிய இங்கிலாந்தின் காலேப் பால்கனர் 115 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரா த்ரோபால் போட்டி.. தங்கப் பதக்கம் வென்ற ஜார்க்கண்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com