சஞ்சு ரெடியா இரு.. அடுத்த போட்டியில் விளையாட போற.. சாம்சனிடம் கூறிய கௌதம் கம்பீர்!

Gambhir Promises Samson: ஜிம் சந்திப்பில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனிடம் ‘தயார் இரு, அடுத்த போட்டியில் நீ விளையாடுவாய்’ என்று கூறியுள்ளார்.

Published on: March 9, 2026 at 3:46 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: ஜிம் சந்திப்பில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனிடம் ‘தயாரா இரு, அடுத்த போட்டியில் நீ விளையாடுவாய்’ என்று கூறியுள்ளார். அப்போது சஞ்சு சாம்சன், “நிச்சயமாக., ஆயத்தமாகி வருகிறேன்” எனப் பதிலளித்துள்ளார். அதாவது, ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் கம்பீருடன் இந்த உரையாடல் நடந்துள்ளது. இதனை சாம்சன் தற்போது வெளியிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில், 2026 T20 உலகக் கோப்பையில் அவர் தனது முழு திறனை வெளிப்படுத்தி அணியில் பிரதான இடத்தினை பிடித்துள்ளார். ஏனெனில், பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில், 31 வயதான சாம்சன் இந்தியாவின் மூன்றாவது T20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் அவர் அணி வரிசையில் இடம் பெறவில்லை. ஆனால் தனது ஆட்டத்தால் அவர் அந்த நிலையை மாற்றினார்.

கௌதம் கம்பீர் செய்தி

இந்த நிலையில், சஞ்சு சாம்சன், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 தோல்விக்குப் பிறகு, ஜிம்மில் கவுதம் கம்பீர் அவரை சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்துள்ளார்.
அப்போது, அடுத்த சில போட்டிகளில் அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்று உறுதிப்படுத்தியதாக வெளிப்படுத்தினார்.

இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “ உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) கௌதம் பாய் என்னை சந்தித்தார். அப்போது அவர், ‘சஞ்சு, தயாராக இரு, அடுத்த போட்டியில் நீ விளையாடப் போகிறாய்’ என்று சொன்னார்.
நான் ‘அப் ஆனே தோ’ என்றேன். உண்மையாகச் சொன்னால், என் சொந்த அணித் தோழர்களுடன் இடத்திற்காக போட்டியிடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் நாம் ஒன்றாகக் கூடி ஒரு நோக்கத்திற்காக போராடும்போது, நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

நியூசிலாந்து தொடரில் எனக்கு மோசமாகவே போனது; என் அணித்தோழர்களுடன் இடத்திற்காக போராடும்போது நான் ஒருபோதும் நன்றாக விளையாடுவதில்லை,” என்றார்.

இதையும் படிங்க: மகளிர் ஹாக்கி.. உருகுவேயை துரத்திய இந்திய அணி!

ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்! Hardik Pandya

ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com