Gautam Gambhir: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என கவுதம் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Gautam Gambhir: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என கவுதம் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Published on: March 17, 2026 at 3:32 pm
புதுடெல்லி, மார்ச் 17 2026: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி ஒருநாள் இந்திய அணியின் பயிற்சியாளராக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றத்தற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் தோனி மற்றும் கம்பீர் இடையே நடந்த நகைச்சுவையான உரையாடலை நினைவுகூர்ந்த அவர், “ஒருநாள் அவர் என் இடத்தில் இருக்க வேண்டும்; அப்போது நான் அவருக்கு அதேபோல் பதில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.
சமீபத்திய டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு வாழ்த்து தெரிவித்த தோனி, “கோச் சாப், உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது. தீவிரம் மற்றும் புன்னகை ஆகியவற்றின் கலவை ஒரு ‘கில்லர் காம்போ’. சிறப்பாகச் செய்தீர்கள், மகிழுங்கள்,” என்று கம்பீரை வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதற்கு ரீப்ளே செய்துள்ள கவுதம் கம்பீர் சிரிப்பதற்கு இதை விடப் பெரிய காரணம் வேறு என்ன இருக்க முடியும்? உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தாக்குதலால் வேதனை: ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்
இந்தநிலையில், தோனி இந்திய அணிக்கு கோச்சாக வர வேண்டும் அப்போது அணியின் வெற்றியை அவர் என்னுடைய இடத்தில் இருந்து பார்க்க வேண்டும். நான் அவருடைய இடத்தில் இருந்து வாழ்த்த வேண்டும் என்பதே என் ஆசை என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. தோனி கோச்சாக இருந்தால் அவரது ஆளுமை அணி வீரர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் அவர்கள் வெற்றிபெற பெரிதும் உதவியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தோனி பயிற்சியாளராக வருவாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சௌதியில், பார்முலா 1 கார் ரேஸ் போட்டிகள் நிறுத்தம்? எஃப்.1 அதிகாரி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com