Name of KL Rahuls daughter: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல், நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
Name of KL Rahuls daughter: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல், நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
Published on: April 18, 2025 at 4:20 pm
பெங்களூரு, ஏப்.18 2025: கே.எல். ராகுலின் பிறந்தநாளில், அதியா ஷெட்டி தனது பெண் குழந்தையின் பெயரையும் வெளியிட்டுள்ளார். இவர்களின் குழந்தைக்கு எவாரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்துடன், நடிகை அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் ஆகியோர் தங்கள் பெண் குழந்தையின் முதல் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த இனிமையான படமும் அறிவிப்பும் இவர்களின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
2025 மார்ச் மாதத்தில், அதியா தனது மகளின் வருகையை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சி செய்தியுடள் பகிர்ந்துக்கொண்டார். அப்போது, இரண்டு ஸ்வான்ஸ் ஓவியத்தை வெளியிட்டு, “ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்.. என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com