Dhoni created new history: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்காமல் அபாரமாக ஆடியதன் மூலம் தோனி புதிய வரலாறு படைத்தார். அது என்ன தெரியுமா?
Dhoni created new history: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்காமல் அபாரமாக ஆடியதன் மூலம் தோனி புதிய வரலாறு படைத்தார். அது என்ன தெரியுமா?
Published on: May 8, 2025 at 4:11 pm
சென்னை, மே 8 2025: ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மே 7 2025) கோல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி மீண்டும் தனது திறமையையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். கோல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆட்டத்தை துவங்கிய சி.எஸ்.கே அணி, கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
தோனி, 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். CSK அணியின் பிளேஆஃப் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தோனி IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். தனது இன்னிங்ஸ் மூலம், தோனி ஐபிஎல்லில் அதிக நாட் அவுட் ஆக இருந்த வீரராக சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் தோனியின் 100வது இன்னிங்ஸ் ஆகும். இது ஐபிஎல்லில் எந்த வீரருக்கும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
இந்த போட்டியில், CSK அணியின் டெவால்ட் பிரெவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார், அதேபோல், ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்து முறையே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். பந்துவீச்சில், நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, KKR அணியின் ரன்களை 179/6 ஆக கட்டுப்படுத்தினார். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க ஆடம்பர பங்களாவில் வசிக்கும் வீரேந்திர சேவாக்.. நிகர சொத்து மதிப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com