Brett Lee: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பிரெட் லீ, துபாயை தனது வீட்டாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.
Brett Lee: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பிரெட் லீ, துபாயை தனது வீட்டாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

Published on: February 26, 2026 at 2:33 pm
Updated on: February 26, 2026 at 2:40 pm
துபாய், பிப். 26 2026: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தான் முழு நேரம் வசிப்பதற்கான வீடாக துபாயை தேர்வு செய்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து வெளிப்படுத்தியுள்ள அவர் துபாயை உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தி நேஷனல் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவை விட்டு துபாய் சென்ற பிரெட் லீ, கடந்த 20 ஆண்டுகளாக துபாய்க்கு மீண்டும் மீண்டும் வந்து செல்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசி, ஜூன் மாதத்தில் முழு நேர வாழ்க்கைக்காகத் துபாய் சென்றார். கடந்த 8 மாதங்களாக அவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.
பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை முறை
துபாய் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்று என பிரட் லீ குறிப்பிட்டுள்ளார். மேலும், வணிக வாய்ப்புகள், வாழ்க்கை முறை ஆகியவை அங்கு உலகத் தரம் வாய்ந்தவை என்று கூறிய அவர் ஆஸ்திரேலியா தனது சொந்த நாடு என்றாலும், துபாய் ‘அடுத்த நிலை’ என்று தெரிவித்துள்ளார். மேலும், வரி குறைவு, உள்கட்டமைப்பு சிறந்தது என்றும் தெரிவித்தார்.
குடும்ப வாழ்க்கை
மனைவி லானா மற்றும் 6, 10, 19 வயது குழந்தைகளுடன் வசிக்கும் அவர் அனைவருக்கும் துபாயைப் பிடித்துள்ளது. பள்ளிகளும் குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களை அளிக்கின்றன.
துபாய் விளையாட்டின் மையமாக மாறும் என்று தெரிவித்துள்ள அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களை அங்கு வர ஊக்கமளித்துள்ளார். தொடர்ந்து அடுத்த 2-3 ஆண்டுகளில் பல விளையாட்டு வீரர்கள் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com