பாரத் சனாதன் பிரீமியர் லீக்.. ₹31 லட்சம் பரிசு.. முழு விவரம்!

Bharat Sanatan Premier League: பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள், தொடர்பான சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது.

Published on: January 19, 2026 at 2:48 pm

Updated on: January 19, 2026 at 3:20 pm

புதுடெல்லி ஜனவரி 19, 2026; பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புது டெல்லியில் உள்ள, இந்திய அரசியல் மாமன்றத்தில் நடந்தது. இதில் பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாகவும், இந்தத் தொடரில் கலந்து கொள்ள உள்ள அணிகள் மற்றும் அதன் பெயர்கள் குறித்தும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, பாரத் சனாதன் பிரீமியர் லீக் 2026 மார்ச் 13 முதல் 15 வரை இந்தூரில் நடைபெற உள்ளது. இதை, சனாதன் கிரிக்கெட் கிளப் LLP ஏற்பாடு செய்கிறது.

இது ஒரு தேசிய T10 கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியின் நோக்கம், கிரிக்கெட்டுடன் ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாகும்.

இந்த முயற்சி, தேவகிநந்தன் தாகூர் ஜி மகாராஜ் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படுகிறது. இதன் மூலம், விளையாட்டு மட்டுமல்லாமல் சமூக பொறுப்பு மற்றும் ஆன்மீக மதிப்புகள் இணைந்து வெளிப்படுகின்றன.

பங்கேற்கும் அணிகள்

சத்திரபதி சிவாஜி வாரியர்ஸ் – மகாராஷ்டிரா

சுபாஷ் சந்திர போஸ் ஃப்ரீடம் XI – மேற்கு வங்காளம்

சர்தார் பகத் சிங் பிரிகேட் – பஞ்சாப்

ராணி லட்சுமிபாய் ஸ்ட்ரைக்கர்ஸ் – உத்தரப் பிரதேசம்

அஹில்யா மாதா கார்டியன்ஸ் – மத்யபிரதேசம்

சம்ராட் அசோக் லயன்ஸ் – டெல்லி

சந்திரசேகர் ஆசாத் சேனா – உத்தரகாண்ட்

மகாராணா பிரதாப் ரன்பங்குரே – ராஜஸ்தான்

SPL 2026 – வீரர் தேர்வுகள் மற்றும் பரிசுத் தொகைகள்

SPL 2026-க்கான வீரர் தேர்வுகள் பிப்ரவரி 2, 2026 முதல் தொடங்குகின்றன. இவை இந்தியாவின் எட்டு நகரங்களில் நடைபெறும். திறமையான வீரர்கள் இந்த தேர்வுகள் மூலம் அணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள்

  • நவி மும்பை
  • கொல்கத்தா
  • சந்தீகார்
  • லக்னோ
  • இந்தூர்
  • நொய்டா
  • தேஹ்ராடூன்
  • ஜெய்ப்பூர்

பரிசுத்தொகை

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ₹31 லட்சம் வழங்கப்படும். அதே போல் இரண்டாம் பரிசு ₹15 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொடரின் நாயகனுக்கு கார் பரிசாக வழங்கப்படும்; அதேபோல் ஆட்ட நாயகனுக்கு ₹21,000 ரொக்க பரிசு வழங்கப்படும்.

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கருக்கு இடமில்லை.. மார்க் வாக் XI அணி.. சர்ச்சையும் விவாதமும்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com