டாக்கா, ஏப்.9, 2026: 2025 அக்டோபரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமினுல், தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC) நடவடிக்கையால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் தேசிய கேப்டன் தமீம் இக்பால் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் (பி.சி.பி) ஏற்பட்ட நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. பதவி நீக்கப்பட்ட தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், தனது நீக்கம் சட்டவிரோதமானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலையீட்டை நாடியுள்ளார்.
அதில், தனது நீக்கம் “அரசியல் சூழ்ச்சி” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், விசாரணை “பிழையானது, சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, இந்த நடவடிக்கை வங்கதேச கிரிக்கெட் கவுன்சில் அரசியலமைப்பையும், உலக கிரிக்கெட் நிர்வாக விதிகளையும் மீறுகிறது என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான அமினுல் ஹக் உட்பட அதிகாரிகள் அரசியல் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினா சுற்றுப்பயணம்.. 24 பேர் கொண்ட குழு அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்