Allah Mohammad Ghazanfar: பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் காபூலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அல்லா முகம்மது கஜான்ஃபர்.
Allah Mohammad Ghazanfar: பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் காபூலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அல்லா முகம்மது கஜான்ஃபர்.

Published on: March 18, 2026 at 1:28 pm
Updated on: March 18, 2026 at 1:54 pm
காபூல், மார்ச் 18, 2026: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை கண்டித்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அல்லா முகம்மது கஜான்ஃபர் உணர்ச்சிபூர்வமாக இந்தியாவிடம் அவசர உதவி கோரிக்கை விடுத்துள்ளார். காபூலில் பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் கஜான்ஃபர், இந்தியாவிடம் உதவி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் தாக்குதலை அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து, அல்லா முகம்மது கஜான்ஃபர், நியூஷ் 18க்கு அளித்த பேட்டியில், “அங்கு உள்ள மக்களுக்கு சிகிச்சைக்கான பணம் இல்லை. இப்போது அவர்கள் அந்த இடத்தையும் குறிவைத்து தாக்கியுள்ளனர்; அந்த மக்களை வீரமரணம் அடையச் செய்துள்ளனர். இது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.” என உணர்சிப்பொங்க கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தாக்குதலால் வேதனை: ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்
மேலும், “அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வந்து சாதாரண மக்களை குறிவைத்து தாக்குகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்கானிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளாது. ஆப்கானிஸ்தானின் வரலாறு அனைவருக்கும் தெரியும். அந்த வரலாறு மீண்டும் நிகழ்ந்தால், அது பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்தியா எங்கள் நெருங்கிய நாடு
தொடர்ந்து, “இந்தியா எங்கள் நெருங்கிய நண்பர். அவர்களுடன் தொடர்பு கொண்டு, இத்தகைய பிரச்சினைகள் குறித்து பேச விரும்புகிறோம், இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க. இது மற்ற நாடுகளுக்கும் எங்கள் வேண்டுகோள். இது மக்களுக்கு நல்லதல்ல. தற்போது உலகம் பல சவால்களை எதிர்கொள்கிறது, இப்படிப்பட்டது யாருக்கும் நல்லதல்ல,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வர வேண்டும்..கம்பீரின் விருப்பம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com