யார் இந்த அதிதீ? இஷான் கிஷனின், ‘வதந்தி காதலி’!

Aditi – Ishan Together: பிரபல கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனின் காதலி என அதிதீ அறியப்படுகிறார். அவர் யார் தெரியுமா?

Published on: March 10, 2026 at 5:59 pm

புதுடெல்லி, மார்ச் 10, 2026: டி-20 உலகக் கோப்பை (2026) இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8, 2026) குஜராத்தின் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தியா இந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்றாவது T20 கோப்பையை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா போட்டியின் சிறந்த வீரராக தேர்வானார்; சஞ்சு சாம்சன் அதிக ரன்கள் எடுத்தார். அதேசமயம், இஷான் கிஷன் அந்தப் போட்டியின் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தார். 27 வயதான இடதுகை வீரர், வேகமான அரைசதம் அடித்து இந்தியாவுக்கு பெரிய இலக்கை அமைக்க உதவினார்.

அவரது இன்னிங்ஸை, அவரது காதலி என வதந்தி பரவிய ஆதிதி ஹுண்டியா, பார்வையாளர் இருக்கைகளில் இருந்து உற்சாகமாகக் கண்டு களித்தார். பின்னர், இஷானுடன் மற்றும் அணியுடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: சஞ்சு ரெடியா இரு.. அடுத்த போட்டியில் விளையாட போற.. சாம்சனிடம் கூறிய கௌதம் கம்பீர்!

யார் இந்த திதி ஹுண்டியா?

மாடல் மற்றும் முன்னாள் அழகி பட்டம் பெற்ற ஆதிதி ஹுண்டியா, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய அணியின் மற்ற வீரர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். சிவப்பு நிற டாப் அணிந்திருந்த அவர், நேரடி ஒளிபரப்பில் பலமுறை காட்டப்பட்டு, அணிக்கு உற்சாகம் அளித்தார். இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் சகோதரி கோமல், அவருக்கு அருகில் அமர்ந்து, அவருக்கு துணையாக இருந்தார்.

அதிதி சில ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஃபேஷன் மற்றும் மேக்கப் லேபலை தொடங்கி, அதை தற்போது வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். மேலும், இவர் இவர் ஒரு கண்டென்ட் கிரியேட்டர் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் இஷானுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது, இருவரும் பலமுறை ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் தோன்றியது, பலரால் ஒரு “சாப்ட் லாஞ்ச்” எனக் கருதப்பட்டது.

அதிதி ஹுண்டியா ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர், 2017-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று, இறுதிப்போட்டியாளராகத் தேர்வானதன் மூலம் புகழ் பெற்றார். அடுத்த ஆண்டு மிஸ் திவா சூப்பர்நேஷனல் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டி-20 உலக கோப்பை வெற்றி.. டிராவிட், லட்சுமணன், அகர்கருக்கு நன்றி.. கௌதம் கம்பீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com