புதுடெல்லி, டிசம்பர் 20 2025: மோடி அரசாங்கம் மற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் ‘VB-G RAM G’ சட்டத்தை கொண்டு வருவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை (MGNREGA) ‘புல்டோசிங்’ செய்கிறது; இந்த ‘கருப்பு சட்டத்திற்கு’ எதிராக லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் போராடுவோம் என்று சனிக்கிழமை (டிசம்பர் 20, 2025) காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உறுதியளித்தார். மேலும், இது மக்களின் நலன்களை தாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “20 ஆண்டுகளுக்கு முன் மன்மோகன் சிங் அரசு பாராளுமன்றத்தில் MGNREGA சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று அவர் நினைவூட்டினார். அந்த ‘புரட்சிகரமான நடவடிக்கை’ கோடிக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக மாறியது என்று கூறினார்.”
தொடர்ந்து சோனியா காந்தி, “சமீபத்தில் அரசு MGNREGA-வை புல்டோசிங் செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மகாத்மா காந்தியின் பெயர் மட்டும் நீக்கப்பட்டதல்ல, MGNREGA-வின் வடிவமும் அமைப்பும் எந்த விவாதமும், ஆலோசனையும், ஒப்புமதியும் இல்லாமல் தன்னிச்சையாக மாற்றப்பட்டுவிட்டது.
மக்களின் உண்மையான பிரச்சனை உள்ளிட்ட நிலவரங்களிலிருந்து மிகவும் விலகி இருக்கும் மத்திய அரசு இனி யாருக்கு எவ்வளவு வேலை, எங்கு, எப்படிப் பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும்?
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது, ஆனால் அதை ஒருபோதும் கட்சியுடன் தொடர்புடைய பிரச்சினையாகக் கருதவில்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து, “இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், மோடி அரசு நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்களை தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம். இருபது ஆண்டுகளுக்கு முன், வேலைவாய்ப்பு உரிமையைப் பெறுவதற்காக நானும் போராடினேன்” என்றார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள VB – G RAM G திட்டத்திற்கு எதிராக நாடு தருவியா போராட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பிரதமர் மோடி, 11 ஆண்டுகளில் வென்ற 29 சர்வதேச விருதுகள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்