UP Congress President Ajay Rai: உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பொம்மை ரபேல் விமானத்தை காட்டியதுடன் அதன் மீது எலுமிச்சை பழம் மற்றும் மிளகாயை கட்டி தொங்கவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
UP Congress President Ajay Rai: உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பொம்மை ரபேல் விமானத்தை காட்டியதுடன் அதன் மீது எலுமிச்சை பழம் மற்றும் மிளகாயை கட்டி தொங்கவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: May 4, 2025 at 9:07 pm
Updated on: May 4, 2025 at 9:09 pm
வாரணாசி, மே 4 2025: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, பொம்மை விமானம் ஒன்றை காட்டினார். அதில் ரபேல் என எழுதப்பட்டிருந்தது. மேலும், அந்த பொம்மை விமானம் மீது அஜய் ராய், மிளகாய் மற்றும் எலுமிச்சை பழத்தை தொங்கவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “பேச்சு மட்டும்தான் இருக்கிறது” என மத்திய பாரதிய ஜனதா அரசை விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அஜய் ராய், “நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, மக்கள் இதனால் அவதிப்படுகிறார்கள்” என்றார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு
#WATCH | Varanasi | Uttar Pradesh Congress President Ajay Rai shows a 'toy plane' with Rafale written on it and lemon-chillies hanging in it.
— ANI (@ANI) May 4, 2025
Ajay Rai says, "Terrorist activities have increased in the country, and people are suffering from it. Our youth lost their lives in the… pic.twitter.com/wIwLsa4akD
மேலும், “. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நமது இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். ஆனால், நிறைய பேசும் இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அவர்கள் ரஃபேலைக் கொண்டு வந்தார்கள். அந்த விமானத்தின் ஹேங்கர்களில் மிளகாய் மற்றும் எலுமிச்சையை தொங்கவிட்டுள்ளனர்.
இவர்கள், பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் மீது அவர்கள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?” என்றார்.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் உறவுகள் மிகவும் மோசமான சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2026ல் டீ விக்கதான் போறீங்க.. த.வெ.க.வை தி.மு.க. மேடையில் கலாய்த்த லியோனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com