ஜி ராம் ஜி.. மக்களை தவறாக வழி நடத்துவதா? காங்கிரஸூக்கு சௌஹான் கண்டனம்!

Shivraj Singh Chouhan : மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

Published on: January 19, 2026 at 6:27 pm

Updated on: January 19, 2026 at 6:28 pm

புதுடெல்லி, ஜன.19, 2026: மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று (திங்கள்கிழமை) புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “விக்ஸித் பாரத் -ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்புகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், “முன்னர் எம்.ஜ.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தில் காங்கிரஸ் வழங்கிய உரிமைகள் காகிதத்தில் மட்டுமே இருந்தன. காங்கிரஸ் தனது சிந்தனைகள், கொள்கைகள், இலக்குகளை கைவிட்டுவிட்டது; நாட்டின் முன்னேற்றம் அல்லது ஏழைகளின் நலனுடன் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

125 நாள்கள் வேலை: முன்பு 100 நாள்கள் இருந்ததை விட, ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் குறைந்தது 125 நாள்கள் வேலை உத்தரவாதம்.
வறுமை ஒழிப்பு: மோடி அரசு 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
முன்னுரிமை: பட்டியல் மற்றும் பழங்குடி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வேலையின்மை கொடுப்பனவு: குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், புதிய சட்டத்தில் வேலையின்மை கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்நிலையில், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சிவராஜ் சிங் சௌஹான், இந்தச் சட்டம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் வீரமரணம்!

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!
Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com