Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: April 24, 2025 at 5:38 pm
புதுடெல்லி, ஏப்.24 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (ஏப்.24 2025) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
#WATCH | Delhi | Union Home Minister Amit Shah leaves from Rashtrapati Bhavan after meeting President Droupadi Murmu pic.twitter.com/Od5YcTzY1a
— ANI (@ANI) April 24, 2025
இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பள்ளத் தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் உள்ளூர் பகுதியை சேர்ந்த குதிரை ஓட்டி உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Union Minister for Home Affairs and Cooperation, Shri Amit Shah and Minister of External Affairs, Dr S Jaishankar called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/pk6XQFeHc5
— President of India (@rashtrapatibhvn) April 24, 2025
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உறுதி
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், அவர்களை தண்டிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு விஷா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக அந்நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எந்த மூலைக்கு சென்றாலும் தண்டிப்போம்: பிரதமர் மோடி உறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com