Earthquake in Delhi : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டது.
Earthquake in Delhi : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டது.

Published on: April 3, 2026 at 10:53 pm
புதுடெல்லி, ஏப்.3, 2026: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த திடீர் அதிர்வுகள் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படுத்தின. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்ததன்படி, வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான்–தாஜிகிஸ்தான் எல்லைப் பகுதி மற்றும் இந்துக் குஷ் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் சுமார் 177 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால், அதிர்வலைகள் தொலை தூரம் வரை சென்றன. இதனால் வட இந்தியா முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டன.
டெல்லி-என்சிஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் சிறிய அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்தனர். சிலர் முன்னெச்சரிக்கையாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியே வந்தனர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டன. இரவு 9.46 மணியளவில் சில விநாடிகள் மட்டுமே அதிர்வு நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலி ஆதார் கார்டுகளுடன் சுற்றித் திரிந்த வங்கதேசிகள்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com