PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.
PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.
Published on: April 27, 2025 at 12:14 pm
புதுடெல்லி, ஏப்.27 2025: பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’121வது பதிப்பில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “காஷ்மீர் சமீபத்திய ஆண்டுகளில் வளர்ச்சியை கண்டுவருகிறது. சுற்றுலா, பள்ளி, கல்லூரி என இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது.
ஆனால், இந்த முன்னேற்றத்தை பயங்கரவாதிகள் தடம் மாறச் செய்ய விரும்புகின்றனர்” என்றார். மேலும், ‘உலகத் தலைவர்கள் முதல் நாட்டு மக்கள் அனைவரும், பஹல்காம் பயங்கரவாத கொடூர தாக்குதலை கண்டித்திருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 1.4 பில்லியன் இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்கிறது” என்றார்.
Sharing this month's #MannKiBaat. https://t.co/2d2HftdU4T
— Narendra Modi (@narendramodi) April 27, 2025
தொடர்ந்து, தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், “சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். முன்னதாக, பீகாரிலும் பிரதமர் நரேந்திர மோடி இதனை வெளிப்படுத்தினார். அப்போது, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் அவர்களை துரத்தி பிடித்து தண்டிப்போம்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 15வது வேலை வாய்ப்பு மேளா; 51 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதம் வழங்கிய பிரதமர் மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com